Shree Shakti Muthu Mariamman Annual Prayer 2026

May 17, 2026 Vel Amman, Events, Thiruvizha

அன்பிற்கினிய பக்தர்களே

நிகளும் சர்வமங்களகரமான பராபவ வருடம் ஆனி மாதம் 11-ஆம் தேதி (ஆங்கிலம். 7 25-06-2026) வியாழக்கிழமை சுக்கில பட்சம், ஏகாதசி திதி, சுவாதி நட்சத்திரம் அமிர்த யோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் அன்று மாலை மணி 3.30-க்கு தொடக்கம் விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவஜனம், பஞ்சகவ்யம், வாஸ்து ஹோமம் மற்றும் பிரவேச பலி பூஜைகள் செய்து தொடர்ந்து தேவதா அணுக்ஞை பெற்று ருத்திர கும்ப பூஜைகள் செய்யப்படும். அதன்பின் மஹாகணபதி மற்றும் அம்பாளின் மூலமந்திர ஜபஹோமங்கள்| நடைபெறும். மாலை மணி 7.01-க்கு மேல் அருகில் இருக்கின்ற ஆற்றங்கரையில் கரகம் பாலித்து எல்லைக்கட்டி த்வஜா ரோகனம் (கொடியேற்றம்) செய்து ரக்ஷாபந்தனம் (காப்பு கட்டுதல் விசேஷ பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கப்படும்.

நிகளும் சர்வமங்களகரமான பராபவ வருடம், ஆனி மாதம் 14-ஆம் தேதி (ஆங்கிலம் 28-06-2026) ஞாயிற்றுக்கிழமை, சுக்கில பட்சமும் சதுர்த்தசி திதியும் கேட்டை நட்சத்திரம் அமிர்த யோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் அன்று காலை மணி  8.01-க்கு மேல் | பூர்வங்க விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவஜனம், பஞ்சகஷ்பம் பூஜை தொடர்ந்து ஸ்ரீ  ருத்திர கும்ப பூஜைகள் நடைபெறும். பின் அம்பாளுக்கு மற்ற பரிவார சுவாமிகளுக்கும் மூல மந்திர ஜப ஹோமம் செய்து மஹா பூர்ணாஹூதியும் வீபூதி பிரசாதமும்  வழங்கப்படும். அதை தொடர்ந்து சிம்ம லக்கனத்தில் அம்பாளுக்கு விஷேச கும்ப ஜலாபிஷேகம் நடைபெறும். அதன்பின் நண்பகல் மணி 1.00-க்கு மகேஸ்வர பூஜை செய்து அன்னதானம் வழங்கப்படும்.

Date : 28 June 2026 Sunday

Venue: 91D, Solok Rawana, Jalan P. Ramlee, 10460 Penang

Map: https://maps.app.goo.gl/MriQrvScRKX89MZr8?g_st=ac

2026, chariot, free school temple, mahamariamman, muthu mariamman, penang, sakti muthu mariamman, solok rawana, thiruvila, Thiruvizha

Comments are currently closed.


This Velmuruga.com maintaned and managed by M-Rames.