ஜனனீ ஜனனீ
ஜனனீ ஜனனீ ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஒரு மான் மழுவும் சிரு பூந்திறையும்
சடை வார் குழலும் இடை வாகனமும்
கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே
நின்ற நாயகியே இட பாகத்திலே
ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ (2)
(ஜனனீ)
சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும்
ஷண் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்
அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும்
தொழும் பூங்கழலே மலைமாமகளே
அலை மாமகள் நீ கலைமாமகள் நீ (2)
(ஜனனீ)
ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே
பல தோத்திரங்கள் தர்ம சாத்திரங்கள்
பணிந்தேத்துவதும் மணி நேத்திரங்கள்
சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ (3)
(ஜனனீ)
– voice by great Mastro
Comments are currently closed.
Velmuruga