தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமி
தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமி திருவருள் போற்றி! 🙌🏻
குன்ற குடியான் என்பார்
பழனிமலை நாதன் என்பார்
வடபழனி ஆண்டவன் என்பார்
சரவணன பவன் என்பார்
விமலன் சாமி என்பார்
தண்டாயுதபாணி என்பார்
கலியுக வரதன் என்பார்
வெற்றி வடிவேலன் என்பார்
வீர வடிவேலன் என்பார்
மரகத வண்ணன் என்பார்
ஞான பழம் கேட்டவனாம்
நம்பினோரை நாடுபவனாம்
காவடி பிரியனாம்
ராஜா அலங்காரன் கொண்டவனாம்
ஆண்டியாய் நின்றானாம்
ஆனால் செல்வத்தை
எல்லாம் கொடுப்பானாம்
அப்படி பட்ட முருகன் அவன்
ரொம்ப ரொம்ப சின்னவனாம்
சுவாமி சின்ன சின்ன முருகய்யா!
சிங்கார முருகய்யா!
கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும்
செந்தில் வடிவேலன் அவன்
வெற்றிவேல் முருகனுக்கு
நெற்றி கண்ணில் பிறந்தவனே! உன்னை சுத்துதையா மக்க ஜனம் எட்டுத்திக்கும் தமிழ் காத்த
பேரழகா வாரும் ஐயா
சின்ன சின்ன முருகய்யா! சிங்கார முருகய்யா! கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும் செந்தில் வடிவேலன் அவன் ..
Comments are currently closed.
Velmuruga