Benefit of Coconut Breaking – தேங்காய் உடையும் பலன்கள்
வாழ்வில் முன்னேற்றம் ஏற்படவும்,நினைத்த காரியம் ஈடேறவும் கோயிலில் அர்ச்சனை செய்கிறோம்.சஞ்சலமான மனதை அமைதி படுத்தேவே தெய்வ வழிபாடு ஆகும்.
தேங்காய் உடைக்கும் போது சகுனம் பார்ப்பது என்பது,பிரசன்ன ஜோதிடம் போல் அந்தகாலத்தில் இருந்த ஒரு சகுன ஜோதிடமாகும்.அந்த காலத்தில் தன் நினைத்த காரியம் எப்படி நடக்கும் எனபதை அறிந்து கொள்வதற்காக தேங்காய் உடைத்து பார்ப்பதுண்டு.சகுனத்திற்காக தேங்காய் உடைக்கும்பொழுது தேங்காய் சரிபாதியாக இரண்டாக உடைந்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.தேங்காயின் மேல்பகுதி (கண் பாகம்) பெரியதாகவும், அடிப்பகுதி சிறியதாகவும் dkonlinecasinos.com உடைந்தால் அதிர்ஷ்டம்- செல்வம் பெருகும்.தேங்காய் அழுகலாக இருந்தால் நினைத்த காரியம் தள்ளி போகும்.
ஆனால ஆலயத்தினுள் அர்ச்சனை செய்தபின் உடைக்கும் தேங்காய்க்கு சகுனம் பார்க்க வேண்டியதில்லை.அதே போல் பூஜைக்கு நீங்கள் கொடுக்கும் தேங்காய், பழம் மாறி வந்தாலும், அபசகுனமாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.அதேபோல் அழுகலாக இருந்தாலும் கவலைபடவேண்டியதில்லை.
உள்ளன்போடு தெய்வத்துக்கு படைக்கும் எந்த பொருளையும் கடவுள் ஏற்றுக்கொள்வார்.அழுகலாக இருக்கும் தேங்காயாக இருந்தாலும் சரி,காணிக்கை இல்லாத வேண்டுதலாக இருந்தாலும் சரி.நம் அன்போடு தெய்வத்தை வணங்கினால் போதும்,இறைவனின் அருள் எப்போதும் நம் கூடவே இருக்கும்.
அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.
Source: sri subramaniar swamy alayam kuala selangor
Leave a Reply
You must be logged in to post a comment.