Tamil new year horoscope for year of vijaya 2013 – 2014

April 12, 2013 Vel collectionfacebookHinduInfo StoryinterestingScienceTamilWhat's New

நந்தன வருடம் நிறைவடைந்து புதிய தமிழ் வருடமான விஜய வருடம் பிறக்கிறது. 13.4.2013 சனிக் கிழமை நள்ளிரவு மணி 1.24க்கு சுக்ல பட்சத்து சதுர்த்தி திதி, கார்த்திகை நட்சத்திரம் நான்காம் பாதம், ரிஷப ராசி மகர லக்னம் 4-ம் பாதத்தில், நவாம்சத்தில் மேஷ லக்னம் மீன ராசியில், ஆயுஷ்மான் நாம யோகத்தில் வனிசை நாம கரணத்தில், அமிர்தயோகம், நேத்திரமற்ற, ஜீவனம் நிறைந்த நன்னாளில் பஞ்சபட்சியில் வல்லூறு இரவு நான்காம் சாமத்தில் துயில் கொள்ளும் நேரத்தில் சூரிய தசையில், செவ்வாய் புக்தியில், சனி அந்தரத்தில், புதன் ஓரையில் விஜய வருடம் சிறப்பாக பிறக்கிறது.
மேஷம்
எதிலும் முதலிடத்தைப் பிடிக்க நினைப்பவர் நீங்கள். உங்களது ராசிக்கு 4-ஆம் வீடான சுக வீட்டில் புத்தாண்டு பிறக்கிறது. இழுபறியாக நின்ற வேலைகள் பூர்த்தியாகும். மனக்குழப்பம் நீங்கும். சந்தோஷம் நிலைக்கும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும்.
.
புது வருடம் ஆரம்பிக்கும்போது உங்களின் ராசிநாதன் செவ்வாய் 10-ஆம் வீட்டில் அமர்ந்திருப்பதால் புது பொறுப்பும் பதவியும் தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். அரசு அதிகாரிகளின் நட்புறவு கிட்டும். ஆனால் எதையும் முழுமையாக முடிக்க முடியாமல் அவதிப்படுவீர்கள்.
.சிலர் உங்களைப் பயன்படுத்தி முன்னேறுவர். ஆடம்பரம் வேண்டாம். ராசிக்குள் கேது நிற்பதால் எதிலும் ஒரு சலிப்பு சோர்வு தலைச்சுற்றல் காய்ச்சல் தூக்கமின்மை வந்துபோகும். பெரிய நோய் இருப்பது போன்ற பிரமை வந்து நீங்கும். பண விஷயத்தில் கறாராக இருங்கள்.
குழந்தை இல்லாத தம்பதிக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். மகனின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். வழக்கு சாதகமாகும். ஆனால் மே 29-ஆம் தேதி முதல் உங்கள் ராசிக்கு 3-ஆம் வீட்டில் குரு அமர்வதால் சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். தைரியம் கூடும். எதிர்ப்புகள் அடங்கும். கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்த சிலர் இழுத்தடிப்பர். வீடு வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். இளைய சகோதரருடனான மனத் தாங்கல் நீங்கும். வருடம் முழுக்க ராசிக்கு 7-ஆம் வீட்டில் சனி நிற்பதால் எதிலும் திட்டமிடல் தேவை.
வியாபாரிகள் பெரிய முதலீடுகளையும் கடன் கொடுப் பதையும் தவிர்க்கவும். பங்குதாரர்களிடம் மனஸ்தாபம் ஏற்பட்டாலும் லாபம் உண்டு. ஹோட்டல் கட்டட பொருட்கள் இரும்பு வகைகளால் ஆதாயம் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் இல்லையே என்ற வருத்தம் மேலிடும். மேலதிகாரியை அனுசரித்து செல்லுங்கள். திடீர் இடமாற்றம் உண்டு. கன்னிப்பெண்கள் தடைப்பட்ட கல்வியை போராடி முடிப்பர். மாணவர்கள் கல்வியில் அதீத கவனம் செலுத்துவது அவசியம். அரசியல்வாதிகளுக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய நிறுவனங்கள் வாய்ப்பளிக்கும். உங்கள் வெற்றி தொடரும்.
முன்கோபத்தைத் தவிர்த்து ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய வருடம் இது.

ரிஷபம்
நாட்டு நடப்பை நன்கு அறிந்தவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 3-வது வீட்டில் இந்த புத்தாண்டு பிறப்பதால் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வரவேண்டிய பணமெல்லாம் வந்து சேரும். சேமிக்கத் துவங்குவீர்கள். புதியவர்கள் அறிமுகமாவர். வழக்குகள் சாதகமாகும்.
புத்தாண்டு பிறக்கும்போது சந்திரன் வலுவாக இருப்பதால் தொட்டது துலங்கும். புதிய முயற்சிகள் வெற்றி அடையும். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். மகளுக்கு நல்ல மணமகன் அமைவார்.
இந்த வருடம் முழுக்க சனி உங்கள் ராசிக்கு 6-ஆம் வீட்டிலேயே பலம் பெற்று நீடிப்பதால் முன்னேற்றப்பாதையை நோக்கி பயணிப்பீர்கள். பிரச்னைகளை சமாளிக்கக் கூடிய மனோபலம் உங்களுக்குக் கிடைக்கும். கணவன்- மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். வருமானம் உயரும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வீடு வந்து சேரும். கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.
பிரிந்திருந்த தம்பதி ஒன்றுசேர்வீர்கள். உங்களுக்குள் கலகமூட்டியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். கைமாற்று கடனையும் அடைப்பீர்கள்.பிள்ளைகளை நல்ல பள்ளி கல்லூரிகளில் சேர்ப்பீர்கள்.
வியாபாரிகள் தங்களின் அணுகுமுறையை மாற்றி லாபம் ஈட்டுவார்கள். பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தங்கள் கூடிவரும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் பணிந்து போவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணிகளில் இருந்த தேக்கநிலை மாறும். மேலதிகாரி உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். வருட தொடக்கத்திலேயே பதவி- சம்பள உயர்வு உண்டு. புதிய வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம்.
.கன்னிப்பெண்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். தடைப்பட்ட திருமணம் கூடிவரும்; கண்ணுக்கு அழகான கணவர் அமைவார். தடைப்பட்ட உயர்கல்வியை மீண்டும் தொடர்வீர்கள்.. கவிதை- கட்டுரை இலக்கியப் போட்டிகளில் திறமையை வெளிப்படுத்தி பரிசு- பாராட்டுகளை பெறுவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்புகளை கட்சித் தலைமை ஒப்படைக்கும். சகாக்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். ஆதாரம் இல்லாமல் எதிர்க்கட்சியினரை விமர்சிக்காதீர்கள். கலைத் துறையினர் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவர். அரசால் ஆதாயம் உண்டு. மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு அடிப்படை வசதிகளை உங்களுக்கு அமைத்துக் கொடுப்பதுடன் உங்களை சாதிக்க வைப்பதாகவும் அமையும்.

மிதுனம்
நன்கு யோசித்து முடிவெடுப்பவர் நீங்கள். உங்களுக்கு 2-வது ராசியில் புத்தாண்டு பிறப்பதால் எதிர்பார்த்த தொகை வந்து சேரும். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். குழப்பம் ஏற்படுத்திய உறவினர்- நண்பர்களின் சுயரூபத்தை கண்டறிந்து ஒதுக்குவீர்கள். வருடம் பிறக்கும்போது ராகு 5-ஆம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகளின் பிடிவாதம் அதிகரிக்கும். மகளுக்கு வரன் தேடும்போது மணமகனின் பழக்கவழக்கங்களை நன்கு விசாரித்து முடிவெடுக்கவும்.
பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. ஒற்றை தலைவலி ரத்தசோகை மூட்டுவலி வரக்கூடும். எல்லோரையும் சந்தேகக் கண்ணுடன் பார்ப்பீர்கள்.
தெளிவான முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள். பூர்வீகச் சொத்து விஷயத்தில் கவனம் தேவை. வீட்டில் தடைப்பட்ட சுப காரியங்கள் ஏற்பாடு ஆகும். உடல் நலனில் கவனம் தேவை. எவர் மீதும் அதீத நம்பிக்கை வைக்க வேண்டாம். அடிக்கடி கோபம் எழும்.
குடிநீரை கொதிக்க வைத்து குடியுங்கள். தம்பதிக்கு இடையே விட்டுக்கொடுத்து போகவும். பிள்ளைகள் சில நேரங்களில் உங்களை புரிந்துகொள்ளாமல் பேசுவர். எதிலும் உணர்ச்சிவசப்படாமல் முடிவெடுப்பது நல்லது.. விலை உயர்ந்த ஆபரணங்களை இரவல் தர வேண்டாம். எவருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம்.
சிறுசிறு விபத்துகள் வரக்கூடும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வீண் செலவுகளைத் தவிர்க்கப் பாருங்கள்.
மனைவிக்கு சிறுசிறு அறுவை சிகிச்சை, அவருடன் கருத்துமோதல்கள் எழலாம். அரசு அதிகாரிகளை பகைத்துக்கொள்ளாதீர்கள்.
.
கன்னிப்பெண்கள் பெற்றோரின் பேச்சுக்கு முக்கியத்துவம் தருவது அவசியம். உடல் உஷ்ணத்தால் வயிற்றுவலி வந்து நீங்கும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். நல்ல நட்புச் சூழலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அரசியல்வாதிகள் உட்கட்சிப் பூசலில் தலையிட வேண்டாம். பதவியைத் தக்கவைத்துக் கொள்ள போராட வேண்டியிருக்கும். கலைத் துறையினருக்கு தடைப்பட்டிருந்த வாய்ப்பு இனி தேடி வரும். உங்களின் படைப்புகள் குறித்த கிசுகிசுக்கள் வரத்தான் செய்யும்.
மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு அவ்வப்போது உங்களை அலைக்கழித்தாலும் புதிய அணுகுமுறையால் வெற்றிபெற வைக்கும்.

கடகம்
கள்ளம் கபடமற்றவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 5-ஆம் வீட்டில் சுக்கிரன் நிற்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் எதையும் சாதிக்கும் வல்லமை பிறக்கும். எதிர்பார்த்த தொகை வந்து சேரும். வி.ஐ.பி-களின் நட்பு கிடைக்கும். பூர்வீகச் சொத்து பங்கை கேட்டு வாங்குவீர்கள். பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக சேமிக்கத் துவங்குவீர்கள். மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.
வருமானத்தை உயர்த்த புதுவழிகளில் முயற்சிப்பீர்கள். திடீர்யோகம் பணவரவு உண்டு. பழைய கடனில் ஒரு பகுதியை அடைக்க வழி பிறக்கும். உங்களின் தாழ்வு மனப்பான்மை நீங்கும். மதிப்பு கூடும். பெரிய பதவிகள் தேடி வரும். திடீர் பயணங்கள் செலவுகள் வேலைகள் அதிகரிக்கும். வீண் செலவுகள் வேண்டாம். அறிமுகம் இல்லாதவர்களை வீட்டில் சேர்க்க வேண்டாம்.
முன்கோபத்தைக் குறையுங்கள். உடன்பிறந்த வர்களால் மனஸ்தாபங்கள் வெடிக்கும். பூர்வீகச் சொத்து விஷயங்களில் கவனம் தேவை.
இந்த வருடம் முழுக்க ராசிக்கு 4-ஆம் வீட்டில் சனியும் ராகுவும் அமர்ந்திருப்பதால் தாயாருக்கு நரம்புக் கோளாறு ரத்த அழுத்தம் வரும். தாய்வழி உறவினர்களால் அலைச் சலும், மனக்கசப்பும் வந்து நீங்கும். தாய்வழிச் சொத்தை விற்றுவிட்டு புது சொத்து வாங்குவீர்கள்.
6-ஆம் வீட்டில் சூரியன் நிற்கும்போது புத்தாண்டு பிறப்பதால் எதிரிகளும் நண்பர்களாவர். அரசு விஷயங்கள் சாதகமாகும். சொத்து சேரும். தடைப்பட்ட காரியங்களை முழு வேகத்துடன் முடித்துக் காட்டுவீர்கள். சிலருக்கு வேலை கிடைக்கும்.
வியாபாரிகளே… வியாபாரத்தைப் பெருக்க விளம்பரங் களுக்கு செலவு செய்வீர்கள். பக்கத்து கடைக்காரருடனான கருத்து மோதல்கள் விலகும். புதிய தொழிலில் கால் பதிக்கும் முன் அனுபவசாலிகளிடம் ஆலோசித்து செயல்படுங்கள். உத்தி யோகஸ்தர்களுக்கு, பதவி – சம்பளம் உயரும். மேலதிகாரி சிலநேரம் உங்களிடம் கோபப்பட்டாலும் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்.
கன்னிப் பெண்களுக்கு தடைப்பட்ட திருமணம் கைகூடி வரும். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை.நண்பர்களுடன் கருத்து மோதல் விளையாட்டில் சிறுசிறு காயங்கள் ஏற்படலாம். அரசியல்வாதிகள் தலைமையின் சொந்த விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. கலைத் துறையினர் வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவர். பழைய நிறுவனங்கள் உங்களை அழைத்துப் பேசும். மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு அனுபவம் சகிப்புத் தன்மையால் உங்களை சாதிக்க வைப்பதாக அமையும்.

சிம்மம்
புதுமை விரும்பி நீங்கள். தைரிய ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சனி வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால் திடீர் யோகம் பண வரவு உண்டு.
பழைய பிரச்னைகள் ஓயும். குடும்பத்தில் மதிப்பு கூடும். பழைய சொத்து ஒன்றை எதிர்பார்த்த விலைக்கே விற்பீர்கள். வி.ஐ.பி-களின் நட்பு கிடைக்கும். வெளிநாடு மற்றும் வெளி மாநிலத்தவர்களுடன் சேர்ந்து தொழில் செய்யும் யோகம் உண்டாகும். புத்தாண்டு பிறக்கும்போது செவ்வாய் ராசிக்கு 6-ஆம் வீட்டில் நிற்பதால் தொட்டது துலங்கும்.
அத்தியாவசியச் செலவுகளால் கையிருப்பு கரையும். வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு 3-ல் ராகு தொடர்வதால் புதிய முயற்சிகள் வெற்றியடையும். பெரிய பதவியில் அமருவீர்கள். பேச்சில் தடுமாற்றம் நீங்கும். வழக்கு சாதகமாகும். போட்டி- பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள். இளைய சகோதரருடனான மனஸ்தாபம் விலகும். அவர் மூலம் உதவிகளும் உண்டு. 9-ஆம் வீட்டில் கேது நிற்பதால் சேமிப்புகள் கரையும். அப்பாவுக்கு நெஞ்சுவலி மூட்டுவலி வந்துபோகும். அவருடன் வீண் விவாதங்கள் வெடிக்கும். வாகனத்தை இயக்கும்போது கவனம் தேவை. சொந்த ஊர் கோயில் திருவிழாவை சொந்த செலவில் நடத்துவீர்கள். அடிக்கடி வெளியூர் பயணம் செல்ல வேண்டி வரும்.
பிரபலங்களை பகைக்க வேண்டாம். எவருக்கும் எந்த உறுதிமொழியும் தரவேண்டாம். புதிய நபர்களை வீட்டுக்கு அழைத்து வராதீர்கள். விலை உயர்ந்த பொருட்களை கவனமாகக் கையாளுங்கள். அவ்வப்போது பழைய கடன் பிரச்னைகள் மனதை வாட்டும்.
மே 29-ஆம் தேதி முதல் குரு உங்கள் ராசிக்கு 11-ல் அமர்வதால் புகழ் கௌரவம் உயரும். பண வரவு அதிகரிக்கும். மூத்த சகோதரர் பகையை மறந்து வலிய வந்து பேசுவார். சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம் திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்லவிதமாக முடியும்.
சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகனின் திருமணம் சிறப்புற நடக்கும். பழைய மனையை எதிர்பார்த்த விலைக்கு விற்பீர்கள்.
வியாபாரிகளுக்கு பற்று – வரவு உயரும். சனி 3-ல் சாதகமாக இருப்பதால் பிரபலங்களின் உதவியோடு கடையை விரிவுபடுத்துவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். கன்னிப்பெண்கள், போலியான நண்பர்களை விலக்குவீர்கள். நல்ல வேலை கிடைக்கும். உங்களுக்கு நல்ல குணம் கொண்ட கணவர் அமைவார். கலைத் துறையினருக்கு எதிர்பார்த்திருந்த வாய்ப்புகள் தள்ளிப்போனது அல்லவா? இனி, பெரிய நிறுவனங்கள் உங்களை அழைத்துப் பேசும். உங்களின் படைப்புத் திறன் வளரும்.
மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு உங்களுக்கு வசதி- வாய்ப்புகளையும், பதவி மற்றும் பணவரவையும் பெற்றுத் தருவதாக அமையும்.

கன்னி
மன்னிக்கும் குணம் கொண்டவர் நீங்கள். குரு பகவான், உங்கள் ராசிக்கு 9-ஆம் வீட்டில் அமர்ந்திருக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால், இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள்.பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். கைமாற்று கடனை அடைப்பீர்கள்.குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பிரிந்திருந்தவர்கள் ஒன்றுசேர்வீர்கள். சிலருக்கு, பிள்ளை பாக்கியம் உண்டு. தடைப்பட்டிருந்த கல்யாணம், கிரகப்பிரவேசம் நல்லவிதமாக நடந்தேறும்.
உங்கள் ராசிக்கு லாப வீட்டில் சந்திரன் நிற்கும்போது புத்தாண்டு பிறப்பதால், வருமானம் உயரும். பதவிகள் தேடி வரும். மூத்த சகோதர- சகோதரிகளுடனான மனத் தாங்கல் நீங்கும்.
செவ்வாய் 5-ஆம் வீட்டில் நிற்கும்போது, புத்தாண்டு பிறப்பதால், பிள்ளைகளிடம் கெடுபிடி வேண்டாம். பிள்ளைகளை அவர்கள் விரும்பும் பாடப் பிரிவில் போராடி சேர்ப்பீர்கள்.
புத்தாண்டு முழுக்க சனிபகவான் ராசிக்கு 2-ஆம் வீட்டில் அமர்ந்து பாதச் சனியாக தொடர்வதால், வீண் விவாதங்களைத் தவிருங்கள். எவரையும் விமர்சிக்க வேண்டாம். திடீர் பண வரவு, செல்வாக்கு எல்லாம் உண்டு. எனினும், செலவுகளும் அதிகரிக்கும். உங்களின் நிதி நிலை தெரியாமல் உறவினர், நண்பர்களில் சிலர் பண உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள்.வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு 2-ஆம் வீட்டி லேயே ராகுவும் தொடர்வதால், பேச்சில் கடுமை காட்டாதீர்கள்.குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் எழும்..
வியாபாரிகள் பெரிய முதலீடுகளைத் தவிருங்கள்.
கன்னிப் பெண்களுக்கு தகுதியான கணவன் அமைவார். மாணவர்களுக்கு கடின உழைப்பு தேவை. அரசியல்வாதிகள் தலைமையிடம் விட்டுக்கொடுத்து போகவும். கலைஞர்களுக்கு அரசாங்கத்தின் பாராட்டு கிடைக்கும்.
மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு சிக்கனம் மற்றும் மௌனத்தின் அவசியத்தை உணர்த்துவதாக அமையும்.

துலாம்
மற்றவர்களின் வருத்தங்களை புரிந்து உதவும் குணம் கொண்டவர் நீங்கள். உங்களின் ராசிக்கு 10-வது வீட்டில் புத்தாண்டு பிறப்பதால் தடைகளைத் தாண்டி முன்னேறுவீர் கள். சாணக்கியத்தனத்துடன் பேசி காரியம் சாதிப்பீர்கள்.உங்களிடம் கடன் வாங்கி ஏமாற்றியவர்கள் பணத்தைத் திருப்பித் தருவார்கள். நீங்களும் கைமாற்றுக் கடனை அடைப்பீர்கள். மகனின் திருமணம் இனிதே நடந்தேறும்.
புத்தாண்டு பிறக்கும்போது செவ்வாய் 4-ஆம் வீட்டில் இருப்பதால் தன்னம்பிக்கை பிறக்கும். தாயாருக்கு ஆரோக்கியக் குறைவு வீடு- வாகன பராமரிப்புச் செலவுகள் வந்துபோகும்.
வாழ்க்கைத் துணை உங்களின் நிறை- குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். மே 28-ஆம் தேதி வரை உங்கள் ராசிக்கு 8-வது வீட்டில் குரு மறைந்திருப்பதால் மறைமுக பணவரவு உண்டு; செலவுகளும் இருக்கும். வீண் பழிச்சொல்லுக்கு ஆளாவீர்கள். வாகனத்தில் செல்லும்போது அதீத கவனம் தேவை.
வாழ்க்கைத் துணையின் வழியில் அலைச்சலும் செலவும் இருக்கும். எவருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம்.
வியாபாரிகள் சந்தை நிலவரங்களை அறிந்து புதிய சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள். அரசாங்க நெருக்கடி கள் நீங்கும். வேலையாட்களும் பங்குதாரர்களும் பணிந்து போவார்கள். பழைய பங்குதாரர்களும் தேடி வருவர். வியாபாரம் செழிக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு எவரும் குறை சொல்லமுடியாத நிலை உருவாகும். முக்கிய கோப்புகளை கவனமாகக் கையாளுங்கள். மேலதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவர். சக ஊழியர்களால் மறைமுகமாக சில பிரச்னைகள் எழலாம். கன்னிப்பெண்களுக்கு உயர்கல்வி சம்பந்தப்பட்ட குழப்பங்கள் நீங்கும். சுற்றி இருப்பவர்களின் சுயரூபத்தை உணர்வீர்கள். தாயாரின் ஆதரவு உண்டு. ஆடை- ஆபரணங்கள் சேரும். தள்ளிப்போன திருமணம் கூடி வரும்.
அரசியல்வாதிகளுக்கு வேலை அதிகரிக்கும். கட்சி அறிவிக்கும் போராட்டங்களில் பங்கேற்று தலைமையின் நன்மதிப்பை பெறுவீர்கள். கலைத் துறையினருக்கு தடைப்பட்ட வாய்ப்புகள் எல்லாம் இனி வீடு தேடி வரும். மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு அவ்வப்போது உங்களுக்கு சுகவீனங்களைத் தந்தாலும் தன்னம்பிக்கையால் வெற்றிபெற வைப்பதாக அமையும்.

விருச்சிகம்
தன்மானம் மிகுந்தவர் நீங்கள். உங்களுக்கு 9-வது ராசியில் புத்தாண்டு பிறப்பதால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உங்களின் ஆளுமைத்திறனும் கையில் பணப் புழக்கமும் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பூர்வீகச் சொத்தில் மாற்றம் செய்வீர்கள். ரசனைக்கேற்ற வீடு- வாகனம் அமையும்.
வருடம் ஆரம்பிக்கும்போது செவ்வாய் 3-ஆம் வீட்டிலேயே அமர்ந்திருப்பதால் வீடு- மனை வாங்குவது விற்பது சுலபமாக முடியும். கைமாற்றுக் கடனை அடைப்பீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். மகளின் கல்யாணம் சிறப்புற நடக்கும். வி.ஐ.பி-களின் ஆதரவு உண்டு.
சுக்கிரன் உங்கள் ராசிக்குள் நிற்கும்போது புத்தாண்டு பிறப்பதால் பேச்சில் இனிமை கூடும். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். கொடுத்த கடன் திரும்ப கிடைக்கும். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
புது பொறுப்புகளும் பதவிகளும் தேடி வரும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.
திடீர் பயணங்களும் செலவுகளும் அதிகரிக்கும். யதார்த்தமாக நீங்கள் பேசுவதையும் சிலர் தவறாகப் புரிந்துகொள்வர்.
தம்பதிக்குள் மனம் விட்டுப் பேசி சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும்.
சனி பகவான் ராசிக்கு 12-ஆம் வீட்டில்… ஏழரைச் சனியின் ஒரு பகுதியான விரயச்சனி தொடர்வதால் இனம் புரியாத கவலைகள் வந்து செல்லும். ஓரளவு பண வரவும் உண்டு. சிலர் உங்களை தவறாகப் புரிந்துகொள்வர்.
வியாபாரிகளே… தரமான சரக்குகளை வாங்கி புது சலுகைகளை அறிவித்து லாபம் ஈட்டுவீர்கள். கடையை வேறிடத்துக்கு மாற்றுவீர்கள்.
கன்னிப்பெண்கள் கூடா பழக்கவழக்கம் உள்ளவர்களிடம் இருந்து விடுபடுவீர்கள். உயர்கல்வியில் போராடி வெற்றி பெறுவீர்கள். மனதுக்குப் பிடித்தவர் கணவனாக அமைவார். மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு சிறு சிறு தடைகள்- ஏமாற்றங்களைத் தந்தாலும் அவற்றையெல்லாம் கடந்து இலக்கை எட்டிப்பிடிக்க வைப்பதாக அமையும்.

தனுசு
தாராள மனம் கொண்டவர் நீங்கள். புத்தாண்டு பிறக்கும் போது சனி உங்களின் லாப வீட்டில் தொடர்கிறார். திடீர் செல்வாக்கு புகழ் உண்டாகும். பண வரவு அதிகரிக்கும். பழைய மனையை விற்றுவிட்டு புது வீடு வாங்குவீர்கள். கடன்கள் அடைபடும். வழக்குகள் சாதகமாகும். விசேஷங்களில் முதல் மரியாதை கிடைக்கும். ஆபரணம் சேரும். நாடாளுபவர்கள் உதவுவர்.பணம்- நகை வீட்டுப் பத்திரங்களை கவனமாகக் கையாளுங்கள். சிக்கனமும் அவசியம். வீண் சந்தேகத்தால் நல்லவர்களை இழக்கவேண்டி வரும்.
சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பிரிந்திருந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகனுக்கு நல்ல மணப்பெண் வாய்ப்பாள். தாயாரின் உடல் நிலை சீராகும். பழைய சொத்து ஒன்றை எதிர்பார்த்த விலைக்கு விற்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு.திடீர் பயணங்கள் அதிகரிக்கும். எவரிடமும் சொந்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
புது வருடம் பிறக்கும்போது 2-ஆம் வீட்டிலேயே செவ்வாய் அமர்ந்திருப்பதால் வீண் வாக்குவாதத்தைத் தவிர்க்கவும். உடன்பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்து போங்கள். சிலர் வீடு மாற வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். முக்கிய பணிகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது.
ராகு உங்கள் ராசிக்கு 11-ஆம் வீட்டில் தொடர்வதால் பழைய சிக்கல்களை புதிய கோணத்தில் அணுகி வெற்றி பெறுவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். புதிய பதவிகள் தேடி வரும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு பதவி- சம்பள உயர்வு உண்டு. அலுவலகப் பிரச்னைகள் மட்டுமின்றி அதிகாரியின் சொந்தப் பிரச்னைகளையும் தீர்த்துவைப்பீர்கள். பெரிய பொறுப்புகளுக்கு உங்கள் பெயர் பரிசீலிக்கப்படும். சிலருக்கு புது வேலை கிடைக்கும்.
கன்னிப்பெண்களின் நீண்ட நாள் கனவு நனவாகும். தாமதமான கல்யாணம் வருடத்தின் பிற்பகுதியில் நல்லவிதமாக முடியும்.
மாணவர்களுக்கு நல்லவர்களின் நட்பு கிடைக்கும். பாடம் தொடர்பான சந்தேகங்களை உடனுக்குடன் ஆசிரியரிடம் கேட்டு தெளிவு பெறுங்கள்.
அரசியல்வாதிகள் ஆதாரம் இல்லாமல் எவரையும் விமர்சித்துப் பேச வேண்டாம். சகாக்கள் சிலர் உங்களைப் புகழ்வது போன்று இகழ்வார்கள். கலைஞர்கள் கிடைக்கும் வாய்ப்புகள் எதுவானாலும் தவிர்க்காமல் ஏற்றுக்கொள்வது நல்லது.
மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு ஆரம்பத்தில் உங்களை அலையவைத்தாலும் பிறகு எதிர்பாராத பண வரவையும் வெற்றிகளையும் தரக்கூடியதாக அமையும்.

மகரம்
பெற்ற தாயையும் பிறந்த மண்ணையும் அதிகம் நேசிப்பவர் நீங்கள். உங்களுக்கு லாப வீட்டில் சுக்கிரன் அமர்ந்திருக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறக்கிறது. திட்டமிட்ட காரியங்கள் சிறப்பாக நிறைவேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வீட்டில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.
நண்பர்கள் உறவினர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவர்.பேச்சில் கம்பீரம் பிறக்கும். வழக்கு சாதகமாகும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும்.
மே 28-ஆம் தேதி வரை உங்கள் ராசிக்கு 5-ஆம் வீட்டில் குரு அமர்ந்திருப்பதால் குடும்பத்தில் கூச்சல் – குழப்பம் விலகும். தாம்பத்தியம் இனிக்கும். வீண் செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். சிலருக்கு மழலை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளால் செல்வாக்கு கூடும். மகளுக்கு நல்ல வரன் அமையும்; நல்ல வேலை கிடைக்கும். தாய்மாமன் வகையில் உதவிகள் கிடைக்கும். பூர்வீகச் சொத்தின் பங்கு கைக்கு வரும். தாயாரின் ஆரோக்கியம் சீராகும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.
.கேது 4-ஆம் வீட்டில் நிற்பதால் முக்கியக் கோப்புகளில் கையெழுத்திடும்போது கவனம் தேவை. சொத்து வாங்கும் போது தாய் பத்திரத்தை சரி பார்க்கவும். தாயாருக்கு கை- கால் மற்றும் முதுகு வலி வந்துபோகும். தாய்வழி உறவினருடன் கருத்து வேறுபாடுகள் எழலாம்.
சனி உங்கள் ராசிக்கு 10-ஆம் வீட்டில் தொடர்வதால் உங்களின் நிர்வாகத்திறன் அதிகரிக்கும். வி.ஐ.பி-களின் அறிமுகமும் அவர்களால் உதவியும் உண்டு. பணபலம் கூடும். புது பதவிகள் பொறுப்புகள் தேடி வரும்.மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். சொத்து தகராறு தீரும்.
கன்னிப்பெண்களுக்கு பேச்சில் அனுபவ முதிர்ச்சி வெளிப்படும். காத்திருந்ததற்கு ஏற்ப நல்ல கணவர் அமைவார்.
மாணவர்கள் கடைசி நேரத்தில் படிக்கும் வழக்கத்தை மாற்றிக்கொள்ளுங்கள். உயர் கல்வியில் விரும்பிய பாடப் பிரிவுகளில் சேர்வதற்கு கொஞ்சம் அலைச்சலும் போராட்டமும் உண்டு. கெட்ட நண்பர்களை ஒதுக்குங்கள். அரசியல்வாதிகள் உட்கட்சி பூசலில் சிக்கிக் கொள்ளாதீர்கள். எதிர்க்கட்சியினர் குறித்த விமர்சனமும் வேண்டாம். நேரத்தை வீணடிக்காமல் செயல்பட்டு சாதிக்கப் பாருங்கள்.
கலைத் துறையினரை பெரிய நிறுவனங்கள் அழைத்துப் பேசும்.
மொத்தத்தில் இந்த புத்தாண்டின் முற்பகுதி முன்னேற்றப் பாதையைக் காட்டினாலும் பிற்பகுதியில் தொலை நோக்குச் சிந்தனையின் அவசியத்தை உணர்த்துவதாக அமையும்.

கும்பம்
அடுத்தவர்களின் குறை-நிறைகளை சாமர்த்தியமாக சுட்டிக்காட்டுவதில் வல்லவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 10-ஆம் வீட்டில் சுக்கிரன் அமர்ந்திருக்கும்போது புத்தாண்டு பிறக்கிறது. மற்றவர்களின் ரசனைக்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். காரியம் நடப்பதற்காக மட்டுமே உங்களின் காலைப் பிடிக்கும் சிலரை இனம் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். வீண் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் துவங்குவீர்கள். தம்பதிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். மனைவி வழி உறவினரால் ஆதாயம் உண்டு.
வெற்றி பெற்ற மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். பண வரவு உண்டு என்றாலும் செலவுகளும் துரத்தும். வழக்குகள் சாதகமாகும். உறவினர் நண்பர்களின் சுயரூபத்தை அறிந்து அதற்கேற்ப செயல்படுவீர்கள். சிலருக்கு புது வேலை அமையும். வெளி நாடு செல்லும் வாய்ப்பு வரும்.
வருடம் முடியும் வரை 3-ஆம் வீட்டில் கேது நிற்பதால் திடீர் பணவரவு உண்டு. அண்ணன் பக்கபலமாக இருப்பார். ஆனால் இளைய சகோதரருடன் பனிப்போர் வந்து நீங்கும். பூர்வீகச் சொத்தை சீரமைப்பீர்கள்.
மே- 29 முதல் குரு உங்கள் ராசிக்கு 5-ஆம் வீட்டில் நுழைவதால் பிரிந்த தம்பதி ஒன்றுசேர்வார்கள். பண வரவு உண்டு. மழலை பாக்கியம் உண்டு. மகளின் தடைப்பட்ட திருமணம் இப்போது கூடிவரும். வீடு கட்டி குடிபுகுவீர்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். வெளிநாட்டினரால் திடீர் திருப்பங்கள் ஏற்படும்.
வியாபாரிகள் வாடிக்கையாளரின் தேவையறிந்து கொள்முதல் செய்வது அவசியம். நீண்டநாளாக செய்ய நினைத்த மாற்றங்களை செய்வீர்கள். விளம்பரங்களால் வியாபாரத்தைப் பெருக்குவீர்கள்
கன்னிப்பெண்கள் விடுபட்ட பாடத்தில் தேர்வு எழுதி வெற்றி பெற்று வேலையில் சேர முயற்சியுங்கள். பெற்றோர் உங்களைப் புரிந்துகொள்வர். மாணவர்கள் ‘தேர்வில் வெற்றி நிச்சயம்’ என்று தப்புக்கணக்கு போடாமல் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம்.
அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளை தலைமை உற்று நோக்கும். கலைஞர்கள் விமர்சனங்கள் குறித்து அஞ்ச மாட்டார்கள். மூத்த கலைஞர்களின் நட்பை பெறுவர். மொத்தத்தில் இந்த புத்தாண்டின் மையப்பகுதியில் இருந்து அதிரடி யோகம் உண்டு.

மீனம்
இனிய பேச்சுக்கு சொந்தக்காரர் நீங்கள். உங்கள் ராசிக்கு லாப வீட்டில் செவ்வாய் உச்சம் பெற்றிருக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால் உங்களின் செல்வம்- செல்வாக்கு உயரும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. உடன்பிறந்தவர்கள் பாச மழை பொழிவார்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும். கடன் பிரச்னை கட்டுப்பாட்டுக்குள் வரும். முன்பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்துக்கு மீதிப் பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள்.
மே 28-ஆம் தேதி வரை குரு உங்கள் ராசிக்கு 3-ஆம் வீட்டில் நிற்பதால் கடினமாக உழைத்து இலக்கை எட்டிப் பிடிப்பீர்கள். சுபச் செலவுகளும் திடீர் பயணங்களும் அதிகரிக்கும். சில காரியங்களில் தடைகள் ஏற்படலாம். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். மனைவி பிள்ளைகளின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளியுங்கள்.
உறவினர்கள் சிலர் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். மற்றவர்களின் பேச்சை நம்பி அதிரடியான முடிவுகளை எடுக்கவேண்டாம். வீடு- வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.தாயாருக்கு உடல் நலம் பாதிக்கும்.வருடம் முடியும் வரை அஷ்டமத்துச் சனி தொடர்வதால் சிறு சிறு விபத்துகள் ஏமாற்றங்கள் குழப்பங்கள் பண இழப்பு வீண் பழி வழக்குகள் வந்து நீங்கும்.
வியாபாரிகள் பெரிய முதலீடுகளைத் தவிர்க்கவும். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த லாபத்தைக் குறைத்து விற்பனை செய்வீர்கள். மே மாதம் முதல் கணிசமாக லாபம் உயரும்.
கன்னிப்பெண்கள் பெற்றோரை அனுசரித்து செல்லவும். உங்களின் தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்கும். மாணவர்கள் அன்றைய பாடங்களை அன்றே படித்து முடித்துவிடுங்கள். கணிதம் அறிவியலில் கூடுதல் கவனம் தேவை.
அரசியல்வாதிகள் கோஷ்டி பூசலில் தலையிடாதீர்கள். மறைமுக எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள்.கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். ஒருபுறம் விமர்சனங்கள் இருந்தாலும் மற்றொரு புறம் கடின உழைப்பால் சாதித்துக் காட்டுவீர்கள்.
மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு… எதிலும் அகலக்கால் வைக்காமல் ஆழம் பார்த்து காலை விடவேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாக அமையும்.

взять деньги в долг на карту хочу получить кредитную картуdigitaldownloadfactory.com получение кредитной карты по почтеhttp://korporativ-extreme.ru/vzyat-dengi-v-dolg-do-zarplati.php

техническое задание на обслуживание сайта

gold кредитка приват

взлом яндекс деньгипрограмма для взлома пароля одноклассников бесплатновзлом пароля wi fi androidкредитка по почте по паспортукредитка универсальная приватбанк тарифыmerit lefkosa hotel & casinodubai hookersстоимость восхождения на килиманджаро

20132014astrologyhoroscopejothidamnew yearrasi palanscienceviyaya varusham

34 Responses to “Tamil new year horoscope for year of vijaya 2013 – 2014”


Leave a Reply

This Velmuruga.com maintaned and managed by M-Rames.